சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் : விஜய் இடத்தை நிரப்ப முயற்சியா ?
தமிழ் சினிமாவில் 'கருப்பு' படத்தின் மூலம் தனக்கான முதல் சாதனை வெற்றியைப் பெற்றுள்ளார் சூர்யா. தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக இருந்த விஜய், தீவிர அரசியலில் இறங்கி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுவிட்டார். இனிமேல், அவர் சினிமா பக்கம் வர வாய்ப்பில்லை.
மற்றொரு முன்னணி நடிகரான அஜித் சினிமாவை விட்டு கடந்த ஒரு வருட காலமாக விலகியே நிற்கிறார். கார் ரேஸில் கலந்து கொள்வதில் தான் அதிக ஆர்வத்தில் உள்ளார். அவர் நடித்த படம் வெளிவந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
அதே சமயம் ஒரு படத்தை முடிப்பதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்களை ஆரம்பிப்பதை சூர்யா வழக்கமாக வைத்திருக்கிறார். 'கருப்பு' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவரது 47வது படத்தை ஆரம்பித்தார். இப்படத்தில் நடித்து முடிக்கும் முன்பே அடுத்து அவரது 48வது படத்தை ஆரம்பித்துவிட்டார்.
அடுத்தடுத்த வெளியீடுகள், படங்களின் மூலம் விஜய் விட்ட இடத்தைப் பிடிக்கும் போட்டியில், தற்போதைக்கு சூர்யா தான் முந்திக் கொண்டுள்ளார்.