ராம் சரணின் பெத்தி ஓடிடி வெளியீடு இதோ...
புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் கதையில் வெளியான படம் பெத்தி. இந்த படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வசூல் செய்த போதிலும், சர்வதேச அளவில் எதிர்பார்த்த அளவு வசூலிக்கவில்லை. உலகளவில் இப்படம் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலித்து, சிறிய நஷ்டத்துடன் தனது ஓட்டத்தை தியேட்டரில் முடித்து கொண்டது.
அடுத்து இந்த படம் ஓடிடி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்திய தகவலின்படி ஜூலை 9 முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. தென்னிந்திய மொழிகளுக்கான ஓடிடி விண்டோ ஐந்து வாரங்களாக உள்ள நிலையில், இதன் ஹிந்தி பதிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.
பெத்தி படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, ஸ்ருதி ஹாசன் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருந்தார். சிவராஜ்குமார், போமன் இரானி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியானபோது ஜான்வி கபூர் கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்ட விதம் விமர்சனங்களை சந்தித்தது. இதனால், இயக்குனர் புச்சி பாபு சனா பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், அக்காட்சிகளில் தேவையான மாற்றங்களையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.