வாசகர்கள் கருத்துகள் (1)
நாய்டு பாசம்
இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் கடந்த ஜூன் 27ம் தேதி அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதற்கு முந்தைய நாள் கோவாவில் நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பியவர், அதற்கு அடுத்த நாள் காலை நடை பயிற்சி சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய நிலையில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது. அவரது இந்த திடீர் மரணம் அவரது சிஷ்யரான நடிகர் பார்த்திபனை மிகப்பெரிய அளவில் துயரத்துக்கு ஆளாக்கி இருக்கிறது.
அன்றைய தினம் மீடியாக்களை சந்தித்த போது கூட, மிகப் பெரிய அளவில் கண்ணீர் விட்டு கதறினார். இந்த நிலையில் தனது திரையுலக குருநாதர் கே.பாக்யராஜின் இழப்பு ஈடு இணையற்றது என்று கூறி எனது எக்ஸ் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவு போட்டிருக்கிறார் பார்த்திபன். அந்த பதிவில்,
என் குருநாதரின் இறுதியாத்திரை நடந்தபோது, என்னிடத்தில் மைக்கை நீட்டிய மீடியா நண்பர்கள் இடத்தில் இங்கு வேண்டாம். அமைதியாக ஒத்துழையுங்கள். பின்னர் பேட்டி கொடுக்கிறேன் என்று கூறி இருந்தேன். அப்போது நான் பேட்டி கொடுக்காததால் பலருக்கு வருத்தம்.
என் குருநாதர் நினைவுகளை பகிர்ந்ததில் சில விமர்சனங்கள்...
என்ன செய்வது? பகிரா விட்டாலும்...
நில் என்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நிற்காதே மனம் சற்று அழுது ஓயட்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக என் குருவின் புகைப்படத்திற்கு
பதில் ஒரு இயக்குனர் நாற்காலியை தொட்டு
வணங்கி விட்டு வேலையை தொடங்குவேன்.
அதாவது உருவம் தவிர்த்தே அவரை தொழுதேன்.
இப்போது அதுவே விதியாய்...
என பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.
நாய்டு பாசம்