உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் பட நாயகியை வைத்து படம் தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்!

முதல் பட நாயகியை வைத்து படம் தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தென்னிந்தியாவில் உள்ள முன்னணி நடிகர்கள் தயாராகவுள்ளனர். அடுத்து அவர் அல்லு அர்ஜூனை வைத்து இயக்கவுள்ளார்.

மறுபுறம் லோகேஷ் கனகராஜ் தனது தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் 'பென்ஸ், 29, பைட் க்ளப்' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை 'பாம், சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தை இயக்கிய விஷால் வெங்கட் என்பவர் இயக்குகிறார். நடிகை ரெஜினா கசாண்டரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான 'மாநகரம்' படத்தில் கதாநாயகியாக ரெஜினா கசாண்டரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !