உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்சாருக்கு இன்னும் அனுப்பவே இல்லை ; வதந்திகளை மறுத்த 'மாத்ருபூமி' படக்குழு!

சென்சாருக்கு இன்னும் அனுப்பவே இல்லை ; வதந்திகளை மறுத்த 'மாத்ருபூமி' படக்குழு!


சல்மான் கான் நடிப்பில் ஹிந்தியில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் 'மாத்ருபூமி ; வார் ரெஸ்ட் இன் பீஸ்'. அபூர்வா லகியா என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம், ஆரம்பத்தில் 'பேட்டில் ஆப் கல்வான்' என டைட்டில் வைக்கப்பட்டு, பின்னர் 'மாத்ருபூமி' என மாற்றப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இந்தப் படம் ஆகஸ்ட்டில் வெளியாக இருப்பதாகவும், ஆனால் சமீபத்தில் சென்சார் சான்றிதழுக்காக இந்தப் படம் அனுப்பப்பட்ட நிலையில், சான்றிதழ் தருவதில் தாமதம் மற்றும் இழுபறி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ஒரு செய்தி நேற்று முதல் பரபரப்பாகப் பரவியது.

இந்த நிலையில், இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சல்மான் கான் பிலிம்ஸ் நிறுவனம், இதுவரை தணிக்கை வாரியத்திடம் 'மாத்ருபூமி' திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், இது போன்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளதுடன், தயவுசெய்து யாரும் இது போன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !