உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 8 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நாயகியாக நடிக்கும் மிர்னா

8 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நாயகியாக நடிக்கும் மிர்னா


கேரளாவைச் சேர்ந்த நடிகை மிர்னா மேனன், அதிதி மேனன் என்ற பெயரில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார், பின்னர் தனது பெயரை மிர்னா மேனன் என மாற்றிக் கொண்டார்.

2016ம் ஆண்டு வெளியான 'பட்டதாரி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவருடன் நடித்த நடிகரை காதலித்தார். பின்னர் அவரிடமிருந்து பிரிந்தார். 'களவாணி மாப்பிள்ளை' என்ற படத்தில் நடித்த அவர் போதிய வாய்ப்புகள் இன்று கேரளாவுக்கு திரும்பிச் சென்றார். 'பிக் பிரதர்' என்ற மலையாள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து அங்கு பிரபலமானார்.

மீண்டும் தமிழுக்கு திரும்பிய அவர் ரஜினி நடித்த 'ஜெயிலர்' படத்தில் அவரது மருமகளாக நடித்தார், தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 8 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நாயகியாக நடிக்கிறார். அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். முத்தையா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக மிர்ணா நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. என்றாலும் படம் குறித்த எந்த தகவலையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !