உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன ஆங்கில குடும்ப கதை

பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன ஆங்கில குடும்ப கதை


ஹாலிவுட்டில் இருந்து பெரும்பாலும் ஆக்சன், ரொமான்ஸ், மற்றும் பேண்டஸி படங்களை அதிகமாக பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படும். ஆனால், அபூர்வமாக ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரு குடும்ப படத்தை தமிழில் ரீமேக் செய்தார் விசு அந்த படம் 'வரவு நல்ல உறவு'.

1937ம் ஆண்டு வெளியான 'மேக் வே பார் டுமாரோ' என்ற படத்தின் கதையை தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து உருவாக்கினார் விசு. ஒவ்வொரு மனிதனும் தன் ஓய்வு காலத்தில் தான் சம்பாதித்த பணத்தை கையில் வைத்திருந்தால் தான் அவனுக்கு உறவுகள் இடையே மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்று வாழும் ஒருவர், ஓய்வூதிய பணம் முழுவதையும் பிள்ளைகளுக்கு பிடித்து கொடுத்துவிட்டு அவர்கள் நம்மை அன்பாக பார்த்துக் கொள்வார்கள் என்று கருதும் இன்னொருவர். இந்த இருவரில் யாருடைய வாழ்வு சிறப்பாக இருந்தது அவர்கள் என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை.

இதே ஆங்கிலப் படம் தெலுங்கில் 'டப்பு பலே ஜப்பு' என்றும், மலையாளத்தில், 'அச்சன் கொம்பத்து அம்மா வரம்பது', என்றும் மற்றும் பெங்காலியில் 'அமடர் சொந்தன்' என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழ் படத்தில் விசு, கிஷ்மு, எஸ்வி சேகர், ஓமக்குச்சி நரசிம்மன், ரேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கவிதாலயா பிக்சர்ஸ் சார்பில் கே பாலச்சந்தர் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்திற்காக சிறந்த கதாசிரியருக்கான விருதை தமிழக அரசிடமிருந்து விசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !