வாசகர்கள் கருத்துகள் (1)
இயக்குனரின் முதல்படம் falimy... அதாவது family... ல் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள்.... அருமையான படம் climax twist எதிர்பாராதது...
இந்த வருட துவக்கத்தில் தமிழில் வெளியான ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் அவருக்கு பல வருடங்களுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. மலையாள இயக்குனரான நித்திஷ் சகாதேவ் என்பவர் இயக்கினார். இதற்கு முன்னதாக மலையாளத்தில் கவனம் ஈர்த்த 'பாலிமி' என்கிற படத்தை இவர் இயக்கியிருந்த நிலையில், தற்போது மம்முட்டி நடிக்கும் புதிய படத்தை இவர் இயக்குகிறார். மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான பூஜை நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.
இந்தப் படத்தில் மம்முட்டி ஒரு உள்ளூர் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேரள - தமிழ்நாடு எல்லைப் பகுதியை பின்னணியாகக் கொண்டு இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான அம்சம், 'ராஜமாணிக்கம்' படத்திற்குப் பிறகு மம்முட்டி இதில் மீண்டும் திருவனந்தபுரம் பாஷை பேசி நடிக்க இருக்கிறாராம். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தில் கதாநாயகிகள் என யாரும் இடம் பெற மாட்டார்கள் என்றும், ஒன்பது வயது சிறுமி ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனரின் முதல்படம் falimy... அதாவது family... ல் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள்.... அருமையான படம் climax twist எதிர்பாராதது...