உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜானகி உடலுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி!

ஜானகி உடலுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி!


இந்தியாவின் நைட்டிங்கேள் என வர்ணிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி (88), வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் கர்நாடகா மாநிலம் மைசூரில் காலமானார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் ஜானகியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு பொதுமக்கள் வரிசையாக நின்று, அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு, மைசூரு எச்.டி.கோட்டை சாலையில் உள்ள ஜானகியின் பண்ணை வீட்டில் உடல் நல்அடக்கம் செய்யப்பட உள்ளது.


மறைந்த ஜானகியின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன், இறுதிச்சடங்கை நடத்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !