உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: எம்ஜிஆர் டைட்டிலில் நடித்த சிவாஜி

பிளாஷ்பேக்: எம்ஜிஆர் டைட்டிலில் நடித்த சிவாஜி


1953ல், மு.கருணாநிதி கதை-வசனம் எழுத 'விடிவெள்ளி' என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து நடிக்க எம்.ஜி.ஆர் திட்டமிட்டிருந்தார். காரணம் விடிவெள்ளி என்ற தலைப்பு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. தலைப்பை கருணாநிதியிடம் சொல்லி அதற்கேற்ற கதை ஒன்றை உருவாக்குமாறு கூறியிருந்தார். கருணாநிதி கதை எழுத ஆரம்பித்தபோதே கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர், சி.வி.ஸ்ரீதர் அதே டைட்டிலில் ஒரு கதை எழுதினார். அதனை சிவாஜி பிலிம்சின் துணை நிறுவனமாக பிரபுராம் பிக்சர்ஸ் தயாரித்தது. சிவாஜி நடித்தார். அவருடன் சரோஜாதேவி, எஸ்.வி. ரங்காராவ், எம்.என். ராஜம், கே.பாலாஜி, டி.ஆர். ராமச்சந்திரன், சாந்தகுமாரி, பத்மினி பிரியதர்ஷினி, பூங்காவனம் எம்.ஆர். சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இந்த படத்தை ஒரு மாதம் வரை காஷ்மீரில் படமாக்க விரும்பினார் ஸ்ரீதர். ஆனால் காஷ்மீர் குளிருக்கு பயந்து நடிகர், நடிகைகள் வரத் தயங்கினர். இதனால் தயாரிப்பாளரான சிவாஜி நடிகர், நடிகைகள் தங்கள் குடும்பத்தோடு படப்பிடிப்புக்கு வரலாம் என்ற சலுகையை அறிவித்தார். அத்தனை பேரும் கிளம்பிச் சென்றார்கள்.

இந்த படம் தங்கையின் வாழ்வுக்காக எந்த எல்லை வரையும் செல்லும் ஒரு அண்ணனை பற்றிய கதை. தங்கை எம்.என்.ராஜம் திருமணத்திற்காக ஒரு வைரமாலையை திருடிவிடுவார் சிவாஜி. அந்த மாலை சரோஜா தேவியுடையது என்பது பின்னர் தெரிய வரும். சரோஜாதேவி பணக்கார வீட்டுப் பெண் மற்றும் சிவாஜியின் காதலி. உண்மை தெரிந்த பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !