100 கோடி வசூலைக் கடந்த 'தமால் 4'
ADDED : 3 hours ago
இந்திரகுமார் இயக்கத்தில், அஜய் தேவகன், அர்ஷத் வர்சி, ரிதேஷ் தேஷ்முக், ஜாவத் ஜாவ்ரி, அஞ்சலி ஆனந்த் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தித் திரைப்படம் 'தமால் 4'.
2007ல் இப்படத்தின் முதல் பாகம் 'தமால்' வெளியாகி 50 கோடியும், 2011ல் வெளியான இரண்டாம் பாகம் 'டபுள் தமால்' 70 கோடியும், 2019ல் வெளியான மூன்றாம் பாகம் 'டோட்டல் தமால்' 220 கோடியும் வசூலித்தன.
தற்போது நான்காம் பாகம் 120 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்த 2026ம் ஆண்டில் 100 கோடி வசூலைக் கடந்த 7வது படமாக 'தமால் 4' அமைந்துள்ளது.
அஜய் தேவகனின் திரையுலகப் பயணத்தில் 15வது 100 கோடி படம் இது. அவரது அதிகபட்ச வசூலாக 2024ல் வெளிவந்த 'சிங்கம் அகய்ன்' படம் 390 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருக்கிறது.