செல்லப்பிராணிக்கு ஓவியத்தைப் பரிசளித்த மஞ்சு வாரியர்
ADDED : 6 hours ago
மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர், கடந்த சில வருடங்களாகவே தமிழிலும் ரஜினி, அஜித், விஜய் சேதுபதி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து இங்கேயும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் மஞ்சு வாரியர், தான் வளர்க்கும் 'ஷி சூ' என்கிற நாய் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.
தற்போது அதற்காக அவர் ஒரு அழகான ஓவியத்தை வரைந்து பரிசாக அளித்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டு, என் வாழ்வை மாற்றிய இந்த குட்டி நண்பனுக்கு.. என்று உருக்கமான வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். மஞ்சுவாரியரின் இந்தச் செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.