உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதை கேட்காமலேயே அல்போன்ஸ் புத்ரன் படத்தை நிராகரித்த ஜேசன் சஞ்சய்

கதை கேட்காமலேயே அல்போன்ஸ் புத்ரன் படத்தை நிராகரித்த ஜேசன் சஞ்சய்

நடிகரும், தமிழக முதல்வருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தனது தந்தையின் பாதையைப் பின்பற்றி நடிகராக மாறாமல், தனது தாத்தாவின் வழியில் இயக்குனராக தனது பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த வகையில், நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் 'சிக்மா' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இம்மாதம் 31ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், விஜய்யின் மகன் நிச்சயமாக நடிப்பில் தான் நுழையப்போகிறார் என்று நினைத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், அவருக்கு 20 வயது ஆன காலகட்டத்திலேயே அவரை நேரில் சந்தித்து ஒரு கதையைக் கூறி, அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால், அப்போதுதான் படிப்பை முடித்திருந்த ஜேசன் சஞ்சய், நடிப்பில் பெரிய நாட்டம் இல்லாததாலும், டைரக்ஷன் குறித்து வெளிநாட்டிற்குச் சென்று படிக்க வேண்டியிருந்ததாலும், நடிக்கும் வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். அல்போன்ஸ் புத்ரன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த ஜேசன் சஞ்சய், அவரிடம் கதை கேட்டுவிட்டு பின்னர் மறுப்பது நன்றாக இருக்காது என்பதால், கதை கேட்காமலேயே தன்னுடைய எண்ணத்தைத் தெளிவாகக் கூறிவிட்டாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !