உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயன் , ராம்குமார் படத்தின் பணிகள் தொடங்கியது!

சிவகார்த்திகேயன் , ராம்குமார் படத்தின் பணிகள் தொடங்கியது!


'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் நடிகர் சிம்புவின் 49வது படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், அந்த படம் கைவிடப்பட்டது.

ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவிற்கு கூறிய அதே கதையில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே உறுதியானது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த படத்தின் பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இதனால் இந்த படத்திற்காக அலுவலகம் அமைத்து நேற்று பூஜையுடன் முன் தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளனர். மேலும், இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளர் ஆக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கூடுதலாக, இதன் படப்பிடிப்பு இவ்வருட அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது என தகவல் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !