செப்டம்பர் 25ல் திரைக்கு வரும் மீசையை முறுக்கு 2
கடந்த 2017ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளியான படம் மீசையை முறுக்கு. இந்த படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி, நடித்திருக்கிறார் ஆதி. இதில் அவருடன் ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஆச்சர், கெட்டிகா சர்மா என்று மூன்று ஹீரோயின்களுடன் யோகிபாபு, கருணாஸும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். குஷ்பூ சுந்தர்.சி தயாரித்திருக்கிறார்.
செப்., 25ல் படம் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக தனது இணைய பக்கத்தில் ஒரு வீடியோ பதிவுடன் வெளியிட்டுள்ளார் ஹிப்ஹாப் ஆதி. அந்த பதிவில், நான் தோப்பனா ஜெயிப்பனாங்கறது முக்கியமில்லை. ஆனா கடைசி வரைக்கும் முயற்சி பண்ணுவேன். அப்படியே தோத்தாலும் மீசைய முறுக்கு கிட்டே தோப்பேன்டா என்று கூறுகிறார் ஹிப்ஹாப் ஆதி. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பப்பாளி பழமே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.