உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனுமதி இன்றி கேரவனுக்குள் நுழைந்து காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சி கொடுத்த உதவி இயக்குனர்

அனுமதி இன்றி கேரவனுக்குள் நுழைந்து காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சி கொடுத்த உதவி இயக்குனர்


நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் 'தி இந்தியா ஸ்டோரி' என்கிற படம் வெளியானது. இது தொடர்பாக சில புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேட்டி அளித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்த நிலையில், தற்போது ஒரு பேட்டியில் அவர் கூறும்போது தன்னுடைய படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றைக் கூறியுள்ளார் காஜல் அகர்வால்.

படப்பிடிப்பு இடைவேளையின் போது, தான் கேரவனுக்குள் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்ததாகவும், அந்தச் சமயத்தில் அனுமதியின்றி உள்ளே நுழைந்த உதவி இயக்குனர் ஒருவர் தனது மேலாடையைக் கழற்றிவிட்டு, தனது நெஞ்சில் 'காஜல்' என்று பச்சைகுத்தி இருப்பதை காட்டியதாகவும் கூறியுள்ளார். அவரது எதிர்பாராத இந்த நடவடிக்கையால் காஜல் கடும் அதிர்ச்சி அடைந்ததாகவும், பயத்தால் தனது கை, கால்கள் நடுங்கத் தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.

தன் மீதான அன்பின் காரணமாகத்தான் அந்த நபர் தனது பெயரைப் பச்சை குத்தியுள்ளார் என்பதைத் தான் புரிந்து கொண்டாலும், ஒரு பெண் தனித்திருக்கும் போது அவரது தனிப்பட்ட இடத்திற்குள் அனுமதி இல்லாமல் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது போன்ற செயல்கள் கடுமையான கிரிமினல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் அந்த உதவி இயக்குனரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தாராம் காஜல் அகர்வால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !