உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பழைய ஒப்பந்தங்கள் : தனுஷிற்கு புதிய சிக்கல் ?

பழைய ஒப்பந்தங்கள் : தனுஷிற்கு புதிய சிக்கல் ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். அவர் இதற்கு முன்பு இரு தயாரிப்பாளர்களிடம் நடிக்க ஒப்பந்தம் போட்டுவிட்டு அதன்படி நடந்து கொள்ளவில்லை என்ற புகார் ஒன்று இருந்தது.

தனுஷ் இயக்கம் நடிப்பில் பல படங்களைத் தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்திற்கு ஒரு படம் ஆரம்பமாகி பின்னர் நின்று போனது. அது போல பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் தனுஷ் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.

அந்தப் படங்களில் நடிக்காமல் அவர் வேறு படங்களில் நடித்து வந்ததால் இருவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து ஒரு சுமூகத் தீர்வு எட்டப்பட்டது.

ஒருவருக்கு 15 கோடி, மற்றொருவருக்கு 8 கோடி தருவதாக தனுஷ் தரப்பில் சொல்லப்பட்டதால் புகார் மற்றும் பேச்சுவார்த்தை இனிதே நிறைவடைந்துள்ளது. இது நடந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் தனுஷ் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என தற்போது இருவரும் மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வருகிறார்களாம்.

இது குறித்து பேச்சுவார்த்தை நடக்குமா அல்லது தருவதாகச் சொன்ன பணத்தைக் கொடுத்து தனுஷ் இதை முடிவுக்குக் கொண்டு வருவாரா என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !