உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வீட்டிலேயே பார் இருக்கு, ஆனால் குடிக்க மாட்டேன்: யாஷிகா ஆனந்த்

வீட்டிலேயே பார் இருக்கு, ஆனால் குடிக்க மாட்டேன்: யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்று அறியப்பட்டவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, பெஸ்ட்டி, ஜாலியோ ஜிம்கானா, டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லைவல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தன் வீட்டில் பார் வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: கடந்த 5 வருஷமாக நான் எந்த பார்ட்டிக்கும் செல்வதில்லை, ஆனால் வழக்கம்போல எங்கள் வீட்டிலேயே பார்ட்டி நடக்கும், வீட்டிலயே பார் இருக்கு, லைட் மியூசிக் இருக்கு, ஆல்கஹாலும் இருக்கும். ஆனால் நான் குடிக்க மாட்டேன்.

எனக்கு சில இயக்குநர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னிடம் கதை கூறும்போது வேறு மாதிரி இருக்கும், எனக்கு முக்கியமான கேரக்டர் என்று சொல்வார்கள். ஆனால் படப்பிடிப்புக்கு சென்ற பிறகு அவர்கள் சொன்ன கதைக்கும், நான் நடிக்கும் கேரக்டருக்கும் சம்பந்தமே இருக்காது. ஒப்புக்கொண்டதற்காக வேறு வழியில்லாம் நடித்து விட்டு வருவேன். இதனால் நண்பர்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்க கூடாது என்ற அனுபவத்தை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

நான் இப்போது சிங்கிள் ஆக தான் உள்ளேன். எனது கடைசி காதல் தோல்வியானது. அது என்னன்னு எல்லாருக்கும் தெரியும். அந்த காதல் தோல்விக்கு பிறகு நான் யாருடனும் ரிலேஷன் ஷிப்பில் இல்லை. இப்போது என்னை நானே காதலித்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறேன்'' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !