உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார் விபத்தில் காயத்துடன் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மான் மகன்

கார் விபத்தில் காயத்துடன் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மான் மகன்


பிரபல இசை யமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன். தனியாக சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார். பல திரைப்படங்களில் பாடியும் உள்ளார். கடைசியாக 'இட்லி கடை' படத்தில் 'மை ஹார்ட் ஸ்பின்னிங்' எனற பாடலை பாடி இருந்தார். இந்த நிலையில் அமீன் நண்பருடன் இன்று அதிகாலை காரில் பயணம் செய்தபோது கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே விபத்தில் சிக்கினார்.

கோயம்பேட்டில் இருந்து வந்த அமீனின் கார் எதிரே வந்த கால் டாக்சி மீது மோதியது. இந்த விபத்தில் அமீன், அவரது நண்பர் பார்கவ், கால் டாக்சி டிரைவர் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினர். இந்த விபத்துத் குறித்துத் அடையாறு போக்குவரத்துத் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !