உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திடீர் லிப்லாக் கிஸ்: அதிர்ச்சி அடைந்த நடிகை நிகிதா

திடீர் லிப்லாக் கிஸ்: அதிர்ச்சி அடைந்த நடிகை நிகிதா


பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிகிதா ராவல். மிஸ்டர் ஹாட் அண்ட் மிஸ்டர் கூல், பிளாக் அண்ட் ஒயிட், தி ஹீரோ: அபிமன்யு, அம்மா கி போலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் அங்கிருந்த போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது பெண் ரசிகை ஒருவர் நிகிதா ராவலிடம் அணுகி செல்பி எடுக்க விரும்புவதாக சொன்னார். அதற்கு நிகிதாவும் சம்மதித்தார். நிகிதாவுடன் செல்பி எடுத்த அந்த பெண் திடீரென அவர் கன்னத்தில் முத்தமிட்டார். பின்னர் திடீரென அவரை பிடித்து இழுத்து கட்டி அணைத்து லிப் லாக் முத்தம் கொடுத்தார். இதனை நிகிதா தடுக்க முயன்றார். ஆனால் அந்த பெண் அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்தார்.

யாரும் எதிர்பாராத இந்த செயலால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிகிதா அதிர்ச்சியில் உறைந்து பின்னர் சுதாரித்துக்கொண்டு தனது உதட்டை சுத்தம் செய்தார். பிறகு அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை வெளியேற்றினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !