உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் 51 வருட திரைப்பயணம் : கேக் வெட்டி கொண்டாடிய தர்மன் படக்குழுவினர்

ரஜினியின் 51 வருட திரைப்பயணம் : கேக் வெட்டி கொண்டாடிய தர்மன் படக்குழுவினர்

நடிகர் ரஜினிகாந்த் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் 1975 ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. அந்தவகையில், கிட்டத்தட்ட திரை உலகில் தனது 51-வது வருடப் பயணத்தை நிறைவு செய்துள்ளார் ரஜினி. இத்தனை வருடங்களிலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்துடன் தற்போதும் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'தர்மன்' படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த 51 வருடத் திரைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக, தர்மன் படக்குழுவினர் படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி ரஜினிகாந்துடன் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் நடிகைகள் சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோரும் பங்கேற்றனர். 51 ஆண்டுகள், ஒரே பெயர், ஒரே சூப்பர் ஸ்டார், தர்மன் படப்பிடிப்புத் தளத்திலிருந்து கொண்டாடுகிறோம் என இது குறித்த வீடியோ ஒன்றை படக்குழுவினர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !