உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தின் 'டேர் டெவில்' படத்தில் மோகன்லால் இல்லையா?

அஜித்தின் 'டேர் டெவில்' படத்தில் மோகன்லால் இல்லையா?


'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் தனது 64வது படத்திற்காக இணைந்துள்ளார். டேர் டெவில் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக நீண்ட நாட்களாகச் செய்திகள் வெளியாகி வந்தன.

இருப்பினும், சம்பளக் குறைபாடு மற்றும் அது சார்ந்த சிக்கல்கள் காரணமாக மோகன்லால் இப்படத்திலிருந்து விலகி விட்டதாகக் கோலிவுட் வட்டாரங்களில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் அஜித்தின் நண்பர் கதாபாத்திரத்திற்காக மோகன்லால் பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இனி அவருக்குப் பதிலாக யார் நடிக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.

பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன் பேனரில் ஷாலினி அஜித்குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார். அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !