உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சவுகார் ஜானகி உடலுக்கு தமிழக அமைச்சர்கள், திரையுலகினர் அஞ்சலி

சவுகார் ஜானகி உடலுக்கு தமிழக அமைச்சர்கள், திரையுலகினர் அஞ்சலி

400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். சென்னை, தேனாம்பேட்டை அருகே செனாடப் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர் கமல் உள்ளிட்ட திரைக்கலைஞர்களும், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சவுகார் ஜானகி உடலுக்கு காலை முதலே சினிமா பிரபலங்களும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். எம்எஸ் பாஸ்கர், நிழல்கள் ரவி, ஷாலினி அஜித், நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள், சிவகுமார், குட்டிபத்மினி, சத்யராஜ் உள்ளிட்ட சிலர் மட்டுமே அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தனர். அதேப்போல் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மா சுப்ரமணியம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

4 மணிக்கு மேல் சவுகார் ஜானகி உடல் அவரது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்ட பின் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !