3 படங்களை வெற்றி என அறிவித்த ரெட் ஜெயன்ட்
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி தயாரிப்பு மற்றும் வினியோக நிறுவனங்களில் ஒன்றாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் அமைச்சராகப் பதவியேற்கும் வரை இந்த கம்பெனியின் அனைத்து நிர்வாகங்களையும் உதயநிதி கவனித்து வந்தார். அதன்பின் அப்பொறுப்பிலிருந்து விலகினார்.
தற்போது உதயநிதியின் மகன் இன்பநிதி இந்த கம்பெனியைப் பார்த்து கொள்கிறார். நடிகர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்பு இந்த நிறுவனம் தயாரிப்பிலிருந்தும், வினியோகத்திலிருந்தும் விலகும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனாலும், அந்த நிறுவனம் தொடர்ந்து எந்த சிக்கலும் இன்றி பயணித்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு கூட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இந்நிறுவனம் பற்றி விமர்சித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் இந்நிறுவனம் நேற்று “3 படங்கள், 3 மாபெரும் வெற்றி. நிற்கமுடியாத ஓர் ஓட்டம்” எனக் குறிப்பிட்டு, 'கட்டா குஸ்தி 2, இதயம் முரளி, டிசி” ஆகிய படங்களின் போஸ்டர்களைப் பகிர்ந்துள்ளது.