உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாமதமாகும் விஜய் சேதுபதியின் 2 படங்களின் ரிலீஸ் அறிவிப்பு

தாமதமாகும் விஜய் சேதுபதியின் 2 படங்களின் ரிலீஸ் அறிவிப்பு

2026ம் ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த நாயகன் என்ற பெருமையை விஜய் சேதுபதிதான் பெறப் போகிறார். அவர் நடித்து இந்த வருடத்தில், கடந்த எட்டு மாதங்களில் 'காந்தி டாக்ஸ்' படம் மட்டுமே வெளியானது. சைலண்ட் படமாக வந்த அப்படம் வந்ததும் போனதும் ரசிகர்களுக்குத் தெரியவில்லை.

இந்த ஆண்டில் அடுத்து எஞ்சியுள்ள நான்கு மாதங்களில் விஜய் சேதுபதியின் மூன்று படங்கள் வெளியாக உள்ளது. அவற்றில் 'பத்தா' படத்தின் வெளியீட்டுத் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகிறது.

அவர் நடித்து சில வருடங்களாகத் தயாரிப்பில் இருக்கும் 'டிரைன், ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு' ஆகிய படங்களின் ரிலீஸ் தேதிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 'டிரைன்' படம் ஆகஸ்ட் மாதமே வெளியாகலாம் என்றார்கள். செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

'ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு' படத்திற்கான ஓடிடி விற்பனை இன்னும் முடிவடையாத காரணத்தால் படத்தின் வெளியீடு தாமதமாகி வருவதாகச் சொல்கிறார்கள்.

சீரான இடைவெளியில் இந்த மூன்று படங்களும் வெளிவந்தால்தான் விஜய் சேதுபதிக்கும், படத்தை வாங்கி வெளியிடும் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் நல்லதாக அமையும். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களின் கையில்தான் அது உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !