42வது வருடத்தில் 555வது படத்தை அறிவித்த அனுபம் கெர்
ADDED : 1 days ago
பாலிவுட் நடிகர் அனுபம் கெர் கடந்த 42 வருடங்களுக்கு மேலாக பாலிவுட் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் குணச்சித்ர மற்றும் வில்லன் நடிகராகத் தொடர்ந்து நடித்து வருகிறார். இரண்டு படங்களை இயக்கியுள்ள இவர் ஐந்து படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். இந்த நிலையில் திரையுலகில் தனது 42வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ள அனுபம் கெர், தான் நடிக்க இருக்கும் 555வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதே சமயம் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் இதில் நடிப்பவர்கள், இயக்குனர் விவரங்கள் எதையும் அவர் வெளிப்படுத்தாமல் கொஞ்ச நாளைக்கு சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும் என்று கூறியுள்ளார். மேலும் தனது பிரத்யேக அடையாளமான மீசையை நீண்ட நாட்கள் கழித்து இந்தப் படத்திற்காக எடுத்துள்ள அனுபம் கெர் தனது புதிய தோற்றத்தையும் சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.