திருமண பந்தத்தில் இணைந்த டிவி பிரபலங்கள்
பிரபல டிவி நடிகர் முகேஷ் கண்ணா. ‛நினைத்தாலே இனிக்கும், காற்றுக்கென்ன வேலி, கார்த்திகை தீபம்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தொகுப்பாளினியான பிரீத்தி என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் நேற்று இவர்களின் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. குடும்பத்தினர், சின்னத்திரையை சேர்ந்த பிரபலங்கள் பலர் வாழ்த்தினர்.
இதேப்போல் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமானவர் வினுஷா தேவி. பாரதி கண்ணம்மா 1, 2வில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். இவர் விக்னேஸ்வரன் என்பவரை காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இவர்களின் திருமணம் சிறப்பாக நடந்தது. சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.