உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இம்மார்ட்டல் படத்தின் புரொமோஷனில் பங்கேற்காதது ஏன்? - கயாடு லோகர் கொடுத்த விளக்கம்

இம்மார்ட்டல் படத்தின் புரொமோஷனில் பங்கேற்காதது ஏன்? - கயாடு லோகர் கொடுத்த விளக்கம்

இதயம் முரளி படத்திற்கு பிறகு மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடித்த ஐ ஆம் கேம் என்ற படம் செப்டம்பர் மூன்றாம் தேதி திரைக்கு வந்துள்ளது. தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள இம்மார்டல் படம் செப்டம்பர் 4ம் தேதியான நேற்று திரைக்கு வந்தது.

ஐ ஆம் கேம் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கயாடு, இம்மார்டல் நிகழ்ச்சியில் பங்கேற்காதது விவாதங்களை ஏற்படுத்தி வருவதை அடுத்து அவர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‛‛அடுத்தடுத்து தொடர்ச்சியாக படப்பிடிப்புகள் இருந்ததால், புரொமோஷனில் கலந்து கொள்ள நேரமில்லை. படத்தின் விளம்பரப் பணிகளுக்காகத் என் வசம் ஒரே ஒரு நாள் மட்டுமே இருந்தது. அன்றைய தினம் ஐ ஆம் கே பட நிகழ்ச்சியில் பங்கேற்றேன். இம்மார்டல் படக்குழுவால் அந்த தேதியில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய முடியவில்லை. நான் நடிக்கும் எல்லா படங்களுமே எனக்கு முக்கியம்தான். எந்த படங்களையும் பெரிய படம், சிறிய படம் என்று நான் பிரித்து பார்ப்பதில்லை. அதனால் இதை வைத்து யாரும் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம். சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளையும் விமர்சனங்களையும் தான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை'' என்றார்.

ஐ ஆம் கேம், இம்மார்டல் படங்களை அடுத்து தமிழில் மஞ்சணத்தி, சூர்யா 48 ஆகிய படங்களில் நடிக்கும் கயாடு லோகர், தெலுங்கில் தி பாரடைஸ், மலையாளத்தில் தாரம் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !