நீண்ட நாட்களுக்குப் பிறகு மேடையில் தோன்றி பாடிய கே.ஜே. யேசுதாஸ்
ADDED : 9 hours ago
பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மலையாளம், தமிழ், தெலுங்கு என ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு வரை இசைக்கச்சேரிகளில் பங்கேற்று வந்த அவர், தற்போது தனது வயது 86 என்பதால் வயது மூப்பு காரணமாக பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை குறைத்துக் கொண்டார். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொது மேடையில் தோன்றி பாடியுள்ளார் யேசுதாஸ். அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில், 'கேரளா அசோசியேஷன் ஆப் டல்லாஸ்' என்கிற அமைப்பின் 50வது ஆண்டு பொன்விழா மற்றும் ஓணம் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த விழாவில் யேசுதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மேடையில் இரண்டு பிரபல பாடல்களின் வரிகளை பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.