உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வர் விஜய் தொடங்கிவைத்த போட்டி: அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்?

முதல்வர் விஜய் தொடங்கிவைத்த போட்டி: அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்?


லண்டனில் நேற்று இரவு நடந்த லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். அந்த போட்டோ, வீடியோ நேற்றும் இன்றும் வைரலாகின. போட்டி நடக்கும் மைதானத்திற்கு நடிகை திரிஷாவும் வந்து, அஜித் டீமை ஊக்கப்படுத்தினார். நேற்று இரவு போட்டிகள் நிறைவடைந்தன. அதில் அஜித் டீம் எத்தனையாவது இடம் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கசிந்தன.

இது குறித்து விசாரித்தால், அஜித்குமார் கலந்துகொண்ட அணி 38வது இடத்தைப் பிடித்தது. இந்த கார் பந்தயம் கடந்த ஆண்டுதான் தொடங்கியது. பார்முலா ஒன் கார் பந்தயத்தை ஒப்பிடும்போது இது வேறு வகை. பார்முலா ஒன் பந்தயம் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ளும் போட்டி. லீ மான்ஸ் கோப்பை என்பது இரு வீரர்கள் ஒரு காரை பகிர்ந்துகொண்டு ஓட்டும் நீண்டநேர பந்தயம். 5.891 கி.மீ அளவுள்ள கிராண்ட் பிரிக்ஸ் தடத்தில் இரண்டு மணிநேரப் பந்தயமாக நடந்தது. இதில் LMP3, LMP3 Pro/Am மற்றும் GT3 ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

நடிகர் அஜித்குமார் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட லீ மான்ஸ் புரோட்டோடைப் காரை LMP3 Pro/Am பிரிவு பந்தயத்தில் ஓட்டினார். இந்த போட்டியில் 38வது இடத்தை அஜித்குமார் பங்கேற்ற அஜித் ரேட்ஆண்ட் அணி பிடித்துள்ளது. முதலிடத்தை ஏஎன்எஸ் மோட்டார்ஸ்போர்ட் அணியும் இரண்டாம் இடத்தை ஆர்-ஏஸ் ஜிபி (R-ACE GP) அணியும் பிடித்துள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் அணி 3வது இடத்தை பிடித்ததாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

முருகன்
2026-09-14 07:40:44

38வது இடம் என்று எழுத தயக்கம் என்ன ஜயா