இளையராஜா, சரத்குமாரை சந்தித்த எழுத்தாளர் சங்கத்தினர்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு இயக்குனர் சேரன் தலைமையிலான அணியினர் பொறுப்பேற்றதில் இருந்து பல திரையுலக பிரமுகர்களை சந்தித்து பேசி வருகின்றனர். ரஜினி, கமலையும் சந்தித்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் சரத்குமாரை ஆகியோரை சந்தித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ‛‛பல நூறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய இளையராஜாயும், மூன்று திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய சரத்குமாரையும் தலைவர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், துணைத் தலைவர் சினேகன், இணைச் செயலாளர் பாஸ்கர் சக்தி, செயற்குழு உறுப்பினர் நவீன் ஆகியோர் சந்தித்தோம்.
“நீங்கள் நமது சங்கத்தில் உறுப்பினராக இருப்பது சங்கத்திற்குப் பெருமை” என்ற எங்களது வேண்டுகோளை இருவரும் உடனடியாக ஏற்றுக்கொண்டு, விண்ணப்பப் படிவத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கையெழுத்திட்டார்கள். எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் இருவருக்கும் ஒரு பேனா அன்புடன் வழங்கப்பட்டது.
நமது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணையும் தகுதியுடன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எனத் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்குப் பங்களித்து வரும் பிரமுகர்களைச் சந்தித்து, அவர்களைச் சங்கத்தில் இணைக்கும் நமது பணி தொடர்ந்து நடைபெறும் என்று கூறியுள்ளனர்.