பரிவேட்டைக்கு சென்ற அவிநாசி லிங்கேஸ்வரர்
ADDED :135 days ago
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவின் 11ம் நாள் நிகழ்ச்சியாக "பரிவேட்டை குதிரை வாகனத்தில் ஸ்ரீ சந்திரசேகர் பெருமான்,ஆனந்தவல்லி தாயார் மற்றும் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.