ராமேஸ்வரம் தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் வெப்பம் குறைய சிறப்பு வழிபாடு
ADDED :128 days ago
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை குறைக்க வேண்டி ராமேஸ்வரம் தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி, பூக்கள், பழங்கள் கொண்டு கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.