பழநி பாலசமுத்திரம் கோட்டை காளியம்மன் கோயில் திருவிழா
ADDED :72 days ago
பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் கோட்டை காளியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் விழா நடந்தது.
பழநி, பாலசமுத்திரம் கோட்டை காளியம்மன் கோயில் திருவிழா ஏப்.27., அன்று முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது. ஏப்.28.,ல் சாமி சாற்றுதல் நடந்தது. மே.5.,ல் ஆற்றில் அம்மன் அலங்காரம் செய்தல். (மே.6,) நேற்று அம்மன் கோயிலுக்கு வந்தடைதல் நடைபெற்றது. அதன்பின் காலை 7:00 மணிக்கு மேல் பூக்குண்டம் இறங்கும் விழா நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் விரதமிருந்து பூக்குண்டம் இறங்கினர். அதன் பின் அக்னி சட்டி எடுத்து வருதல், மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல் ஆகியவை நடைபெற்றது. இன்று மே.7., ஆற்றில் முளைப்பாரி கரைத்தல் உள்ளிட்டவை நடைபெறும். மே.15., அன்று அதிகாலை மறுபூஜையுடன் திருவிழா நிறைவடையும். பால சமுத்திரம் சுற்று வட்டார பக்தர்கள் பலர் திருவிழாவில் பங்கேற்றனர்.