விருத்தாசலம் நாகசக்தி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா துவக்கம்
ADDED :47 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் நாகசக்தி அம்மன் கோவிலில் சித்திரை செடல் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மணிமுக்தாற்றில் இருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டு, அம்மனுக்கு காப்பு கட்டி, கொடியேற்றம் செய்யப்பட்டது. மாலை சிறப்பு அலங்காரத்தில் நாகசக்தி அம்மன் அருள்பாலித்தார். வரும் 12ம் தேதி மாலை 6:00 மணிக்கு 108 சுமங்கலி பெண்களின் திருவிளக்கு பூஜை, 15ம் தேதி செடல் திருவிழா, அன்று இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. 16ம் தேதி மஞ்சள் நீராட்டு, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.