திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் பாலாலயம்
ADDED :2 hours ago
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு பாலாலயம் நடந்தது.திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிேஷகம் நடந்தது. இந்த ஆண்டு கும்பாபிேஷகம் பணிகளை துவக்க கிராம மக்களும் கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யபட்டது. முதல் கட்டமாக பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கபட்டு புனித நீர் கலசங்கள் வைக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.