உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடிகாரர்கள் இடமாக மாறிய கள்ளழகர் திருக்கண் மண்டபங்கள்

குடிகாரர்கள் இடமாக மாறிய கள்ளழகர் திருக்கண் மண்டபங்கள்

அழகர்கோவில்: அழகர்கோவிலை சுற்றியுள்ளகள்ளழகர் எழுந்தருளும் திருக்கண் மண்டபங்கள், குடிகாரர்களின் இடமாக மாறி வருகிறது.


ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் கூறியதாவது: சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் எழுந்தருளும் திருக்கண் மண்டகப்படிகள் பல உள்ளன. அவ்வாறான ஒரு மண்டபம் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் நுழைவு வாயிலில்இருந்து 800 மீ., தொலைவில் உள்ளது. கள்ளழகர் இறங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கும் இந்த இடம், தற்போது குடிமகன்களின் ‘மது போதை மகிழ்வு’ மண்டபமாக மாறியுள்ளது. அசைவம் சமைத்ததற்கான பாத்திரங்களுடன் குடிகாரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மண்டபத்தைசுற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளைசம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றார்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !