காஞ்சி காமகோடி பீடாதிபதி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் விஜய யாத்திரை
சென்னை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு சங்கராச்சார்ய சுவாமிகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு விஜய யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இந்த யாத்திரையின் முழு விபரம்:
மே 22: காளீஸ்வரத்திலிருந்து புறப்பட்டு, மதியம் 1:00 மணிக்கு தெலுங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள யதாத்ரி திருத்தலத்தை சென்றடைகிறார்.
மே 23: யதாத்ரியிலிருந்து புறப்பட்டு, இரவு 8:00 மணிக்கு ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் பகுதியைச் சென்றடைகிறார்.
மே 24: ஓங்கோலிலிருந்து புறப்பட்டு, இரவு 9:00 மணிக்கு தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம், பொன்பாடி பகுதியை வந்தடைகிறார்.
மே 25: மாலை 4:00 மணிக்கு பொன்பாடியிலிருந்து புறப்பட்டு, மாலை 6:00 மணிக்கு காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்திற்கு சுவாமிகள் மீண்டும் வந்தடைகிறார். இது குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் நேரடி ஒளிபரப்புகளை, மடத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (kamakoti.org) மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் வழியாக பக்தர்கள் அறிந்துகொள்ளலாம்.