உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை கன்னார்பாளையம் மாகாளிம்மன் கோவில் கும்பாபிஷேகம்

காரமடை கன்னார்பாளையம் மாகாளிம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம்: காரமடை கன்னார்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் புதிதாக கருவறை, மூன்று நிலை கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகிய திருப்பணிகள் செய்யப்பட்டன. இதன் கும்பாபிஷேகம் விழா, கடந்த 18ம் தேதி மூத்த பிள்ளையார் வழிபாடுடன் துவங்கியது.

விழாவில் மூன்று கால வேள்வி பூஜைகள், மூலமந்திர வேள்வியும், பேரொளி வழிபாடும் நடந்தன. நான்காம் கால வேள்வி பூஜை வழிபாடு முடிந்த பின், காலை, 9:00 மணிக்கு மேல், தீர்த்தக் குடங்களை கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கோபுர கலசத்தின் மீதும், சுவாமிகள் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். வேள்வி பூஜைகளை மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல், சந்திரசேகரன் ஆகியோர் செய்து இருந்தனர்.

விழா ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமையில், ஊர்கவுடர் ரங்கராஜ், மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !