நவ ஜோதிர்லிங்க தரிசனம் சிறப்பு ரயில் யாத்திரை
சென்னை: நவ ஜோதிர்லிங்கங்களை தரிசனம் செய்ய, தமிழகத்தில் இருந்து சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து, சுற்றுலா சிறப்பு ரயில், ஜூன் 18ம் தேதி புறப்படும். திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், எழும்பூர் வழியாக இயக்கப்படும். மல்லிகார்ஜுனர், பீமாசங்கர், த்ரியம்பகேஸ்வர், சோம்நாத், கிரிஷ்னேஸ்வர், ஓம்காரேஸ்வர், மஹாகாளேஸ்வரர், பிரதோஷ விரத நன்னாளில், அவுண்டா நாகநாத் மற்றும் பார்லி வைத்தியநாத் என, ஒன்பது ஜோதிர் லிங்கங்களைக் காணலாம். மொத்தம் 12 நாட்கள் சுற்றுலா செல்ல, ஒருவருக்கு, ‘ஸ்லீப்பர்’ வகுப்பில் 29,950 ரூபாய் கட்டணம், மூன்றாம் வகுப்பு ‘ஏசி’யில், 38,950 ரூபாய் கட்டணம். இதில், போக்குவரத்து, ஹோட்டல், உணவுகள் உள்ளிட்டவை அடங்கும். சுற்றுலா குறித்து தகவல் பெறவும், முன்பதிவு செய்யவும், 73058 58585 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம் அல்லது www.tourtimes.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் என, டூர் டைம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.