செஞ்சி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
ADDED :61 days ago
செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்தல் திருவிழா நடந்தது.
செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. அதை முன்னிட்டு 25ம் தேதி மாலை செஞ்சி கோட்டை செல்லியம்மன், பூவாத்தம்மன் கோவிலில் ஊரணி பொங்கலும், இரவு மாரியம்மன், பூவத்தம்மன், செல்லியம்மன் பூங்கரக ஊர்வலமும் நடந்தது. 26ம் தேதி பகல் 1 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை மாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கலும், இரவு கும்ப படையலும், வானவேடிக்கையுடன் சாமி வீதி உலாவும் நடந்தது. இன்று பூங்கரக ஊர்வலமும், மஞ்சள் நீராட்டும் நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.