உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை ஜக்கம்மாள் கோவிலில் திருக்கல்யாண விழா; இன்று மஞ்சள் நீராட்டு

உடுமலை ஜக்கம்மாள் கோவிலில் திருக்கல்யாண விழா; இன்று மஞ்சள் நீராட்டு

உடுமலை: இந்திரா நகர் ஸ்ரீ ஜக்கம்மாள் கோவில், திருவிழாவையொட்டி, இன்று அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

உடுமலை அருகே இந்திராநகரில், ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ ஜக்கம்மாள், ஸ்ரீ பொம்மியம்மாள், ஸ்ரீ வெள்ளையம்மாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், திருக்கல்யாண திருவிழா திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

நேற்று முன்தினம் இரவு சக்தி அழைத்தலுடன், கும்மியாட்டம் நடந்தது. நேற்று காலை, அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை இந்திரா நகர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களின் பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு மற்றும் நேற்று மாலை பூவோடு எடுத்து வந்தனர். பின்னர் உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. திருவிழாவையொட்டி இன்று காலை, 10:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு நடக்கிறது. நாளை (29ம் தேதி) மகா அபிேஷகமும், ஆராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !