ஊத்துக்கோட்டை திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசை
ADDED :2 days ago
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை திரவுபதி அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா விமரிசையாக நடந்தது.
ஊத்துக்கோட்டையை அடுத்த, பெரம்பூர் கிராமத்தில் தீமிதி திருவிழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும், மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் படுகளம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். அப்போது, கூடியிருந்த பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை அதிரச் செய்தது. இதைத்தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.