முறையூர் வடக்குவாசல் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
ADDED :2 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் வடக்குவாசல் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக ஜூன் 7ம் தேதி அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்தனர். இரவு பெண்கள் பூத்தட்டு எடுத்துவந்து பூச்சொரிதல் செய்தனர். பத்து நாள் திருவிழாவாக தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஜூன் 16ஆம் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.