உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழங்கால ஐம்பொன் சிலைகள் மீட்பு கட்டுமான பணியில் கண்டெடுப்பு

பழங்கால ஐம்பொன் சிலைகள் மீட்பு கட்டுமான பணியில் கண்டெடுப்பு

நாகப்பட்டினம்: நாகையில், கட்டுமானப் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலைகள், வருவாய்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாகை, நீலா வடக்கு வீதியைச் சேர்ந்தவர் ராம் பிரசன்னா,45. இவர் புதிய கடற்கரை செல்லும் சாலையில் புதிதாக கட்டடம் கட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் பளளம் தோண்டியப் போது, 2 அடி உயரத்தில் ஒரே மேடையில் சிவன், பார்வதி மற்றும் சிறிய முருகன் அமர்த்திருக்கும் ஐம்பொன் சிலை மற்றும் 2 அடி உயர நடராஜர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது.  இது குறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிலைகள் வருவாய்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகையில், கண்டெடுக்கப்பட்ட சிலைகள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சோழர்கள் காலத்திற்கு முன்பட்டது. ஆய்வுக்கு பின் விபரங்கள் தெரியவரும்.என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !