குயவன்குடி சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :13 hours ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் 12வது வருடாபிஷேக விழா நேற்று (ஜூன் 8 ல்) நடந்தது. காலையில் ஆரத்தி, கணபதி ேஹாமம், தன்வந்திரி, சுதர்சன, நவக்கிரக ேஹாமம் நடந்தது. சாய்பாபாவுக்கு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உற்ஸவர் சாய்பாபா அலங்காரத்தில் துவாரகமாயியை அடைந்தார். அங்கு கூட்டு பிரார்த்தனை நடந்தது. இரவு ஆரத்தியுடன் விழா நிறைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.