உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காடப்பபிள்ளை அய்யனார் கோயில் புரவி எடுப்பு

காடப்பபிள்ளை அய்யனார் கோயில் புரவி எடுப்பு

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கொங்கு நாச்சியம்மன் அம்மன் கோயில் வைகாசி விழாவை முன்னிட்டு காடப்பிள்ளை அய்யனார் கோயில் புரவி எடுப்பு நடந்தது.


இக்கோயிலில் வைகாசி உத்ஸவம் பத்து நாட்கள் நடைபெறும். மே31ல் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து பூச்சொரிதல் விழா நடந்தது. மறுநாள் காப்புக்கட்டி உத்ஸவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி சிம்மம், பூதம், அன்னம், கமலம், ரிஷபம், யானை, குதிரை வாகனங்களில் அம்மன் எழுந்தருளினார். ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் பால்குடமும், தேரில் அம்மன் எழுந்தருளி வடம் பிடி்தது கற்பகவிநாயகர் கோயிலிருந்து அம்மன் கோயிலுக்கு எழுந்தருளினார். இன்று பத்தாம் நாளை முன்னிட்டு தேர் அம்மன் கோயிலிலிருந்து புறப்பாடாகி விநாயகர் கோயிலில் எழுந்தருளினார். தொடர்ந்து மஞ்சள் நீராடி,புரவி பொட்டலிலிருந்து புரவி எடுத்து காடப்ப அய்யனார் கோயிலில் சேர்த்தனர். இரவு பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காப்பு அவிழ்க்கப்பட்டு உத்ஸவம் நிறைவடைந்தது. பி்ள்ளையார்பட்டி,மருதங்குடி கிராமத்தினர், மற்றும் அனைத்து பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டினை பி.க.ந.க.,நடப்பு காரியக்காரர்கள் கோனாப்பட்டு ஏஆர்.ராமசாமி செட்டியார், அரிமளம் என்.கண்ணன் செட்டியார் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !