நடுவீரப்பட்டு பெரியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம்
நடுவீரப்பட்டு: பெரியாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றின் கரையில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதையொட்டி, கடந்த 10 ம் தேதி காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ேஹாமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கிரஹணம்,பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அங்குரார்பணம், ரக்சாபந்தனம், கும்பலங்காரம், கலாகர்ஷணமும், தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இரவு 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. நேற்று, காலை 5:30 மணிக்கு கோபூஜை, இரண்டாம் கால யாசாலை பூஜை, தத்துவார்ச்னை, நாடிசந்தானம் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, 7:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடந்து, பூஜையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து 8:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மேலும், 8:15 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிர்வாகக்குழுவினர்கள் செய்திருந்தனர்.