வீரபாண்டி உண்டியலில் ரூ.8 லட்சம் காணிக்கை
ADDED :18 hours ago
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் இருந்த 22 உண்டியல்களில் நேற்று காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இப் பணியில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள், சவுராஸ்டிரா கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர்.
காணிக்கை எண்ணும் பணியை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகவேல், ஆய்வாளர் கார்த்திகேயன், செயல் அலுவலர் சுபிதா, கணக்காளர் பழனியப்பன் முன்னிலையில் நடந்தது. கோயில் உண்டியலில் ரூ.8,01,362 காணிக்கை வசூலாகி இருந்தது.