உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுபிட்சம் தரும் சுக்ரவார பிரதோஷம்; சிவ தரிசனம் செய்ய செல்வம் சேரும்!

சுபிட்சம் தரும் சுக்ரவார பிரதோஷம்; சிவ தரிசனம் செய்ய செல்வம் சேரும்!

திரயோதசி திதியும், வெள்ளிக்கிழமையும் இணைந்து வரும் பிரதோஷ தினம் சுக்கிர வாரப் பிரதோஷமாகும். அழகு, கலை மற்றும் செல்வத்தின் அதிபதி சுக்கிரன். இன்று சிவனை வழிபடுவது சுக்கிர யோகத்துடன் வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்க செய்யும்.


பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபடக்கூடிய மிகச்சிறந்த காலமாகும். பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவன் உண்டு உலகைக் காத்த நாள் இது. பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவதால் சகல பாவங்களும் நீங்கி, நற்பலன்கள் கிடைக்கும். பிரதோஷ வழிபாட்டில் நந்தி தேவரின் வழிபாடு மிகவும் முக்கியமானது. பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !